டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. துவக்கம் முதலே ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினார்.
எதிர் அணியின் துவக்க வீரர்கள் இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த காலின் முன்ரோ 40 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 45 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் கலீல் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 156 ரன் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் இலக்கை நோக்கி முன்னேறியது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோ 31 பந்துகளில் 41 ரன் விளாசி அசத்தினா.ர். அதன் பின்னர் வந்த ஒவ்வொரு வீரரும் ஒற்றை இலக்கத்தில் வெகுவேகமாக வெளியேறினார்.
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து அந்த அணியின் விக்கெட்டுகள் சாய்த்தனர். அந்த அணியின் கீமோபால் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரபாடா 4 விக்கெட்டுக்களை வீழ்த்த 18.5 ஓவர்களில் 116 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து டெல்லி முன் மண்டியிட்டது ஹைதராபாத் அணி. இதன் மூலம் டெல்லி அணி 39 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…