ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
2013 ஏப்ரல் 16இல் பெங்களூருவுக்கு எதிராக வெற்றியை தவறவிட்ட டெல்லி, 2025 மீண்டும் அதே நாளில் (ஏப்ரல் 16) ராஜஸ்தானுக்கு எதிராக வெற்றியை பெற்றுள்ளது.

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.
அபிஷேக் போரல் (49), கே.எல்.ராகுல் (38), ஸ்டப்ஸ் (34), அக்சர் படேல் (34) ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி அதே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. RR சார்பில் ஜெய்ஸ்வால் (51), நிதிஷ் ராணா (51) ஆகியோர் அரை சதம் விளாசினார். சஞ்சு 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார்.
ஆட்டம் ‘டை’யில் முடிந்ததை அடுத்து, சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 11 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் கே.எல்.ராகுல், ஸ்டப்ஸ் 12 ரன்கள் எடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வெற்றி பெற செய்தனர்.
ஏப்ரல் 16, 2013
நேற்றைய தேதிக்கும் டெல்லி அணிக்கும் ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. அதாவது இதே போல ஏப்ரல் 16, 2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி (அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ் DD) அணி விளையாடிய போது முதலில் விளையாடிய டெல்லி அணி 152/5 ரன்கள் அடிக்க, அடுத்து களமிறங்கிய RCB அணியும் அதே 152/7 ரன்கள் அடித்து டை ஆனது,
அதன் பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் RCB வீரர்கள் ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் ஆடி 15 ரன்கள் எடுத்தனர். அதனை அடுத்து விளையாடிய டெல்லி அணி 11 ரன்கள் மட்டுமே எடுத்து பெங்களூரு அணியிடம் தோல்வி கண்டது.
2013 ஏப்ரல் 16இல் பெங்களூருவுக்கு எதிராக வெற்றியை தவறவிட்ட டெல்லி, 2025 மீண்டும் அதே நாளில் (ஏப்ரல் 16) ராஜஸ்தானுக்கு எதிராக வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.