DC VS SRH: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச தேர்வு செய்துள்ளது!
டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான 16வது ஐபிஎல் போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்க உள்ளது.
இதற்கு முன்னர் டெல்லி அணி நான்கு போட்டிகளில் 2 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. முன்னதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடிய 3 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் சம பலம் கொண்ட அணி என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
தற்போது டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி லெவன் : பிருத்வி ஷா, ஷிகார் தவான், ரிஷாபத் பந்த் (கீ), ஸ்ரேயாஸ் ஐயர் (கே), கொலின் இன்கிராம், ஹனுமா விஹரி, கிறிஸ் மோரிஸ், அக்ஸர் படேல், ககிசோ ரபாடா அமித் மிஸ்ரா , ராகுல் ட்வெடிய, இஷாந்த் சர்மா
ஹைதராபாத் லெவன் :டேவிட் வார்னர், ஜானி பியர்ஸ்டோவ் (கீ), விஜய் ஷங்கர், கேன் வில்லியம்சன் தீபக் ஹூடா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், ரஷீத் கான், முகம்மது நபி, புவனேஸ்வர் குமார், சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல்