DC vs SRH IPL 2021:டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – போட்டியை வெல்லப்போவது யார்? …!

DC vs SRH:துபாயில் இன்று இரவு நடைபெறவுள்ள 33 வது லீக் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் புள்ளி வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி,இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள 33 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (SRH) எதிர்கொள்கிறது.
கடைசியாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டபோது, சூப்பர் ஓவரில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ரிஷப் பன்ட் தலைமையிலான டிசி வெற்றி பெற்றது.டெல்லி கேபிடல்ஸ் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 ல் வென்றுள்ளது, தற்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மறுபுறம், இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏழு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தை மட்டுமே வென்று தற்போது கடைசி இடத்தில் உள்ளனர்.டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் மொத்தம் 19 போட்டிகள் விளையாடியுள்ளன.அதில்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11 முறை வெற்றி பெற்றுள்ளது,டெல்லி அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஹைதராபாத் அணி வீரர், T நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,அவருடன் தொடர்பில் இருந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், அணி மேலாளர் விஜய் குமார், பிசியோதெரபிஸ்ட் ஷ்யாம் சுந்தர் ஜே, மருத்துவர் அஞ்சனா வண்ணன், தளவாட மேலாளர் துஷார் கேட்கர் மற்றும் நெட் பந்துவீச்சாளர் பெரியசாமி கணேசன் போன்றோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (விளையாடும் XI): டேவிட் வார்னர், விருத்திமான் சாஹா (w), கேன் வில்லியம்சன் (c), மணீஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், கேதார் ஜாதவ், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது.
டெல்லி கேபிடல்ஸ் (விளையாடும் XI): பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (w/c), மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிம்ரான் ஹெட்மியர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025