DC vs SRH IPL 2021:இன்று களம் காணும் டெல்லி கேபிடல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…!

Default Image

துபாயில் இன்று இரவு நடைபெறவுள்ள 33 வது லீக் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்(DC vs SRH) மோதுகின்றன.

ஐபிஎல் புள்ளி வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி,இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள 33 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (SRH) எதிர்கொள்கிறது.

கடைசியாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டபோது, சூப்பர் ஓவரில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ரிஷப் பன்ட் தலைமையிலான டிசி வெற்றி பெற்றது.டெல்லி கேபிடல்ஸ் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 ல் வென்றுள்ளது, தற்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மறுபுறம், இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏழு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தை மட்டுமே வென்று தற்போது கடைசி இடத்தில் உள்ளனர்.எனவே,கேன் வில்லியம்சன் தலைமையிலான அணி இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் மொத்தம் 19 போட்டிகளில் விளையாடியுள்ளன.பதிவுகளின்படி,கேன் வில்லியம்சனின் அணி 11 முறை வெற்றி பெற்றுள்ளது, ரிஷப் பன்ட் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் (Squad) அணி:

ரிஷப் பந்த் (C), ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, அமித் மிஸ்ரா, அவேஷ் கான், அக்சர் படேல், இஷாந்த் சர்மா, ககிசோ ரபாடா, பிருத்வி ஷா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷிகர் தவான், லலித் யாதவ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிம்ரான் ஹெட்மியர், கிறிஸ் வோக்ஸ், அன்ரிச் நார்ட் , ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ரிபால் படேல், லுக்மான் ஹுசைன் மேரிவாலா, எம் சித்தார்த், டாம் கர்ரன், சாம் பில்லிங்ஸ், பிரவின் துபே, விஷ்ணு வினோத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Squad) அணி:

கேன் வில்லியம்சன்(C), டேவிட் வார்னர், அபிஷேக் சர்மா, பசில் தம்பி, புவனேஷ்வர் குமார், மனிஷ் பாண்டே, முகமது நபி, ரஷித் கான், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம், ஸ்ரீவத் கோஸ்வாமி, சித்தார்த் கவுல், கலீல் அகமது, டி நடராஜன், விஜய் சங்கர், விருத்திமான் சஹா, விராட் சிங் , ப்ரியம் கார்க், மிட்செல் மார்ஷ், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், கேதர் ஜாதவ், முஜீப்-உர்-ரஹ்மான், ஜெகதீஷா சுசித், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்