ஐபிஎல் (DC vs RR):இன்றைய 36 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் விளையாடவுள்ளது.
ஐபிஎல் 2021 இன் 36 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து இன்று மாலை 3.30 மணிக்கு ஷார்ஜாவில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரண்டாவது முறையாக விளையாடவுள்ளது.
முன்னதாக,இந்த இரு அணிகளும் விளையாடியபோது, ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி கேபிடல்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் ஒருவருக்கொருவர் 23 போட்டிகளில் விளையாடியுள்ளன, இதில் டெல்லி கேபிடல்ஸ் 11 போட்டிகளில் வென்றது, ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஆட்டங்களில் வென்றது. மேலும்,தற்போதைய சீசனில் டெல்லி கேபிடல்ஸ் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 ல் வெற்றி பெற்று, தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 8 போட்டிகளில் 4 வெற்றி பெற்றுள்ளது, தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் கடைசியாக துபாயில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் விளையாடியது.அதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசியாக துபாயில் பஞ்சாப் கிங்ஸுடன் விளையாடியது.அப்போட்டியில்,ராஜஸ்தான் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கணிக்கப்பட்ட டெல்லி அணி: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (c), மார்கஸ் ஸ்டோனிஸ், சிம்ரான் ஹெட்மியர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே
பெஞ்ச்: இஷாந்த் சர்மா, ஸ்டீவ் ஸ்மித், லலித் யாதவ்.
கணிக்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (c), மஹிபால் லோமோர், லியாம் லிவிங்ஸ்டோன், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சகரியா, முஸ்தாபிஜூர் ரஹ்மான்
பெஞ்ச்: க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், சிவம் துபே.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…