DC vs RCB: ரஹானே, தவான் அதிரடி.! பெங்களூரை தொம்சம் செய்து இரண்டாவது இடத்தை பிடித்த டெல்லி.!

Published by
பாலா கலியமூர்த்தி

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்று அபுதாபியில் நடைபெற்ற 55-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் – ஜோஷ் பிலிப் கூட்டணி களமிறங்கியது. 12 ரன்களில் ஜோஷ் பிலிப் வெளியேற, படிக்கல் அதிரடியாக விளையாடி அரை சத்தத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார்.

அவரைதொடர்ந்து களமிறங்கிய கோலி 29 ரன்களும், டி-வில்லியர்ஸ் 35 ரன்களும் எடுத்து வெளியேறினர். இறுதியாக பெங்களூர் அணி 20 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை டெல்லி அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. டெல்லி அணியில் பந்துவீச்சை பொறுத்தளவில் அன்ரிச் நார்ட்ஜே சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலேயயே பிருத்வி ஷா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 41 பந்துகளில் 54 ரன்கள் அடித்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் அவுட்டானார்.

ஒரு புறம் ரஹானே சிறப்பாக விளையாடி 46 பந்துகளில் 60 ரன்கள் அடித்து, வாஷிங்டன் சுந்தர் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியில் 19 ஓவரில் 154 ரன்கள் அடித்து, 6 விக்கெட்டு வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 14 போட்டிகளில் விளையாடி 8 போட்டியில் வெற்றி பெற்று டெல்லி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பெங்களூர் பந்துவீச்சை பொறுத்தளவில் ஷாபாஸ் அகமது 2, சுந்தர் மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

20 minutes ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

50 minutes ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

57 minutes ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

1 hour ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

2 hours ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

2 hours ago