DC vs PBKS: டாஸ் வென்றது டெல்லி அணி…! முதலில் பந்துவீச்சு தேர்வு..!

DC vs PBKS Toss

ஐபிஎல் தொடரில் இன்றைய DC vs PBKS போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட பரபரப்பான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று சனிக்கிழமை 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் பிளேஆப் சுற்றுக்கு செல்வதற்காக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் நிலையில் இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கு வாழ்வா சாவா ஆட்டமாகும். இதில் வென்றாலும் பஞ்சாப் அணிக்கு மீதமுள்ள போட்டிகளில் அதிக ரன் ரேட் அடிப்படையில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

டெல்லி அணியைப் பொறுத்தவரை மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் அதிக ரன் ரேட் அடிப்படையில் வென்று, எதாவது அதிசயமும் நடந்தால் டெல்லி அணி பிளேஆப் சுற்றுக்கு செல்லும். இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் (பிளேயிங் லெவன்):

டேவிட் வார்னர்(C), பிலிப் சால்ட்(W), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், பிரவீன் துபே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது, முகேஷ் குமார்

பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):

பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான்(C), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(W), சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்