DC vs LSG : களமிறங்கும் புதிய கேப்டன்கள்… டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு.!
டெல்லி மற்றும் லக்னோ அணிகள் இதுவரை 5 முறை மோதியுள்ளன. இதில், டெல்லி 2 முறையும் லக்னோ 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது, மாலை 7:30 மணிக்கு தொடங்க உள்ளது.
இப்பொது டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த சீசனில் இந்த இரு அணிகளும் புதிய கேப்டன்களுடன் களமிறங்குகின்றன. ஆம், டெல்லி கேபிடல்ஸ் அணியை அக்ஸர் பட்டேல் வழிநடத்துகிறார், அதே சமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் உள்ளார்.
இதில் சுவாரஸ்யம் என்னெவென்றால், ரிஷப் பந்த் முன்னதாக டெல்லி அணியின் கேப்டனாக இருந்தவர், இப்போது லக்னோவுக்கு மாறியுள்ளார். அதேபோல், லக்னோவின் முன்னாள் கேப்டன் கே.எல். ராகுல் இப்போது டெல்லி அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் ஐபிஎல் 2025-இல் தங்கள் பயணத்தை வலுவாகத் தொடங்க விரும்புகின்றன. டெல்லி மற்றும் லக்னோ அணிகள் இதுவரை 5 முறை மோதியுள்ளன. இதில், டெல்லி 2 முறையும் லக்னோ 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், லக்னோ 3 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது.
வீரர்கள்
டெல்லி :
கேப்டன் அக்சர் படேல் தலைமயிலான அணியில், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரெல், சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகாம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.
லக்னோ :
கேப்டன் ரிஷப் பந்த் தலைமயிலான அணியில், ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர்.