DC vs KKR: ஆட்டநாயகன் விருது இவருக்குத்தான்.. தோல்வியில் இருந்து மீண்ட டெல்லி!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் 41-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை நடத்தியது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச், வெங்கடேச ஐயர் ஆகியோர் தடுமாற்றத்தை கண்டு விக்கெட்டை இழந்தனர்.
இதனைத்தொடர்ந்து, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சற்று நிதானமாக விளையாடி 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் 34 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்த நிதிஷ் ராணா பெவிலியன் திருப்பினார். பின்னர் வந்த வீரர்கள் டெல்லி அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை இழக்க இறுதியாக 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா 146 ரன்கள் எடுத்து.
டெல்லி அணியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 ஓவர் மட்டுமே வீசியிருந்த நிலையில், 4 விக்கெட்டுகளும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைதொடரந்து 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரான பிருத்வி ஷ, உமேஷ் யாதவின் முதல் ஓவர் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார். டேவிட் வார்னர் 26 பந்துகளில் 42 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் வந்த வீர்ரகள் லலித் யாதவ், அக்சர் படேல் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ரோவ்மேன் பவல் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அணி வெற்றிக்கு வழிவகை செய்தார்.
இறுதியாக ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. கொல்கத்தா பந்துவீச்சை பொறுத்தளவில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வேற்றின மூலம் தோல்வியில் இருந்து மீண்டு டெல்லி அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்துக்கு 8 புள்ளிகளுடன் முன்னேறியுள்ளது. தோல்வியால் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 8வது இடத்தில உள்ளது. 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.