ஐபிஎல் தொடரில் இன்று மாலை நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதவுள்ள நிலையில், இரு அணிகளின் பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI குறித்து காணலாம்.
ஐபிஎல் தொடரில் இன்று மாலை நடைபெறவுள்ள 25-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா அணி 14 போட்டியிலும், டெல்லி அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 1 போட்டி சமனில் முடிந்தது.
டெல்லி கேபிட்டல்ஸ்:
டெல்லி அணியை பொறுத்தளவில் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதே வேகத்தில் வெற்றிப்பயணத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஸ்டாய்னிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பார்மில் இருப்பதை நிரூபித்தார்.
தொடக்க ஆட்டத்தில் தவான் சிறப்பான பார்மில் இருந்து வருகிறார். மிடில் ஆடரை பொறுத்தளவில் ரிஷப் பண்ட், ஸ்டாய்னிஸ், ஹெட்மயர், ரஹானே சிறப்பாக ஆடிவரும் நிலையில், அணியின் ஸ்கொர் எகிற வாய்ப்புள்ளது. பந்துவீச்சில் அவேஷ் கான், ஸ்டாய்னிஸ், அக்சர் படேல் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அமித் மிஸ்ரா கூடுதலாக கைகுடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சில் அஸ்வின் இல்லாதது, டெல்லி அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்:
ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்டீவன் ஸ்மித், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மியர், ஆக்சர் படேல், அமித் மிஸ்ரா / லலித் யாதவ், ககிசோ ரபாடா, இஷாந்த் சர்மா, அவேஷ் கான்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கொல்கத்தா அணியை பொறுத்தளவில் தொடக்க ஆட்டக்காரரான நிதிஷ் ராணா, அதிரடியான பார்மில் உள்ளார். அவரையடுத்து களமிறங்கும் திரிபாதி, மோர்கன், தினேஷ் கார்த்திக், ரஸல், சிறப்பாக ஆடிவருகின்றனர். இது, கொல்கத்தா அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, சுனில் நரைன், சிவம் மாவி சிறப்பாக பந்துவீசி வருவது, அணிக்கு கூடுதல் பலம். கடந்த போட்டி மூலம் ரசல், பேட்டிங்கில் சிறப்பான பார்மில் இருப்பதை நிரூபித்தார்.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்:
சுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸல், பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…