டெல்லி கேப்பிடல் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அதன் பிறகு வந்த வீரர்களால் சரியாக ரன் சேர்க்க முடியவில்லை. அந்த அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் செய்யும் வீரர்களை மாற்றி மாற்றி அனுப்பி வைத்தார். இதன் காரணமாக அவர்களால் சரியாக நிலைத்து ஆட முடியவில்லை. இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் மட்டுமே எடுத்து உள்ளது பஞ்சாப் அணி.
தொடர்ந்து எளிதான இலக்கினை விரட்டி ஆடிய டெல்லி அணி வீரர்கள் அற்புதமாக ஆடினர் அந்த அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 41 பந்துகளில் 56 ரன்களும் கேப்டன் ஐயர் 49 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இதனால் கடைசி ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது டெல்லி அணி.