DC VS SRH: டெல்லி அணி திணறல்..! ஹைதராபாத்திற்கு எளிதான வெற்றி இலக்கு!

Default Image
  • டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி வெறும் 129 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது.

டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இளம் வீரர்கள் அடங்கிய டெல்லி அணி தொடக்க முதலே அதிரடியாக ஆட முனைந்தன.ர்.

ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வலிமையான, அனுபவம் வாய்ந்த பந்தயத்திற்கு முன் அது எடுபடவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 41 பந்துகளில் 43 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார் .

அதன் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற கடைசியில் வந்த அக்சர் பட்டேல் 13 பந்துகளில் 23 ரன் விளாசினார். இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது டெல்லி அணி. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தரப்பில் புவனேஸ்வர் குமார், முகமது நபி, சித்தார்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்