ஐபிஎல் தொடரில் முதல் குவாலிபையர் போட்டியில் டெல்லி அணிக்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி.
ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் – ரோஹித் ஷர்மா களமிறங்கினார்கள். முதல் பந்திலே ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆக, டி காக்குடன் சூரியகுமார் யாதவ் இணைந்தார். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்த டி காக், 40 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து இஷான் கிஷன் களமிறங்கினார்.
அரைசதம் விளாசிய சூரியகுமார் யாதவ், 51 ரன்களில் வெளியேற, அதன்பின் காமிறங்கிய பொல்லார்ட் ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்ப, 13 ரன்களில் க்ருனால் பாண்டியா வெளியேறினார். இறுதியாக மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கவுள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…