#IPL2022: பட்லர் அதிரடி சதம்.. டெல்லி அணிக்கு 223 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 223 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 34-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – படிக்கல் களமிறங்கினார்கள்.
இவர்களின் கூட்டணி அதிரடியான தொடக்கத்தை கொடுக்க, பட்லர் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த படிக்கல் அரைசதம் எடுத்து 54 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த பட்லர் 116 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்கள் எடுத்தது. தற்பொழுது 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கவுள்ளது.