#IPL2022: கடைசி ஓவரில் 2 விக்கெட்.. டெல்லி அணிக்கு 209 ரன்கள் இலக்கு!
இன்று நடைபெற்று வரும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் முதல் போட்டியில் பெங்களுர் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, இரண்டாம் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – கான்வே களமிறங்கினார்கள்.
தொடக்கம் முதலே சிக்ஸர், பவுண்டரிகள் என அதிரடியாக ஆடிவந்த இந்த கூட்டணியால் அணியின் ஸ்கொர் அதிரடியாக உயர்ந்தது. 10 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்களை கடந்த நிலையில், 41 ரன்கள் எடுத்து ருதுராஜ் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சிவம் துபே, கான்வேயுடன் இணைந்து சிறப்பாக ஆட, 87 ரன்கள் எடுத்து கான்வே தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து 32 ரன்கள் அடித்து சிவம் துபே வெளியேற, அணியின் கேப்டன் தோனி களமிறங்கினார்.
மறுமுனையில் இருந்த அம்பதி ராயுடு 5 ரன்கள் எடுத்து வெளியேற, கடைசி ஓவரை நார்ட்ஜே வீசினார். அந்த ஓவரில் மொயின் அலி, உத்தப்பா தங்களின் விக்கெட்டை இழக்க, 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தனர். 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கியுள்ளது.