#IPL2022: பந்துகளை பறக்கவிட்ட ஃபாப்.. பஞ்சாப் அணிக்கு 206 ரன்கள் இலக்கு!

Default Image

ஐபிஎல் தொடரில் தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.

15-வது ஐபிஎல் திருவிழா தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 3-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாப் டு பிளஸ்சி – அனுஜ் ராவத் களமிறங்கினார்கள்.

தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த டு பிளஸ்சி, போக போக வெறித்தனமாக ஆடத் தொடங்கினார். மறுமுனையில் இருந்த அனுஜ் ராவத் அவருடன் இணைந்து சிறப்பாக அடிவர, 21 ரன்கள் குவித்து அனுஜ் ராவத் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து விராட் கோலி களமிறங்க, டு பிளஸ்சி அரைசதம் அடித்தால். ஒரு முனையில் டு பிளஸ்சி சிக்சர், பவுண்டரி என வெளுக்க, மறுமுனையில் இருந்த கோலியும் அவருக்கு சமமாக ஆடிவந்தார்.

57 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டரிகள் என மொத்தம் 88 ரன்கள் அடித்து டு பிளஸ்சி வெளியேற, அவரைதொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அவரும் அதிரடியாக அடிவர, கோலி – தினேஷ் கார்த்திக் கூட்டணியில் அணியின் ஸ்கொர் 200-ஐ கடந்தது. இறுதியாக பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தற்பொழுது பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Rahul Gandhi
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque