#IPL2022: பும்ரா பந்துவீச்சில் திணறிய டெல்லி.. மும்பை அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
தற்பொழுது நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அந்தவகையில் இன்று நடைபெறும் 69-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள்.
இதில் யாரும் எதிர்பாராதவிதமாக டேவிட் வார்னர் 5 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய மிச்சேல் மார்ஷ் டக் அவுட் ஆனார். அவரைதொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ப்ரித்வி ஷா 24 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சர்பராஸ் கான் 10 ரன்கள் எடுத்து வெளியேற, சிறப்பாக ஆடிவந்த ரிஷப் பண்ட் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய சர்துல் தாக்கூர் 4 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக அக்ஸர் பட்டேல் 19 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது மும்பை அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சில் பும்ரா தலா 3 விக்கெட்களும், ராமந்தீப் சிங்க் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.