டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
இன்று நடைபெறும் 55 -வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதி வருகிறது. அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணிபந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் – ஜோஷ் பிலிப் கூட்டணி களமிறங்கியது.
12 ரன்களில் ஜோஷ் பிலிப் வெளியேற, படிக்கல் அதிரடியாக ஆடிவந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய கோலி 29 ரன்களில் வெளியேற, அதன்பின் 50 ரன்கள் அடித்து படிக்கல் வெளியேற, வந்த வேகத்திலே ஒரு ரன் கூட அடிக்காமல் மோரிஸ் தனது விக்கெட்டை இழந்தார். டி-வில்லியர்ஸ் 35 ரன்கள் அடிக்க, அவரைதொடர்ந்து ஆடிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இறுதியாக 20 ஒவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு பெங்களூர் அணி 152 ரன்கள் அடித்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கவுள்ளது.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…