பகலிரவு டெஸ்ட் போட்டி ! ரசிகர்களுடன் பிசிசிஐ தலைவர் கங்குலி எடுத்த செஃல்பி!
இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை காண வந்துள்ள கொல்கத்தா ரசிகர்களுடன் பிசிசிஐ தலைவர் கங்குலி எடுத்த செஃல்பி எடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த போட்டியை நடத்துவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலி தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்தார்.
குறிப்பாக ரசிகர்களை கவரும் விதமாக இந்த முயற்சியை அவர் மேற்கொண்டு வந்தார்.கங்குலியின் முக்கிய நோக்கம் டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்கள் மைதானத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது ஆகும்.இவரது முயற்சி ஏறக்குறைய இன்று நடைபெறும் போட்டியில் நிறைவேறியுள்ளது.இந்த மகிழ்ச்சியை காண வந்துள்ள ரசிகர்களுடன் பிசிசிஐ தலைவர் கங்குலி எடுத்த செஃல்பி எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.