ஒரு நாள் கிரிக்கெட், டி20 போட்டிகள் போல தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிகள் முதலில் 2015இல் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதின.
இந்த பகலிரவு ஆட்டங்கள் தொடங்கி நான்கு ஆண்டுகளாக 11 போட்டிகள் நடைபெற்று உள்ளன. நான்கு ஆண்டுகள் கழித்து 12வது பகலிரவு போட்டியாக இந்திய அணியும், வங்கதேச அணியும் வரும் 22ஆம் தேதி மோத உள்ளன.
இந்த பகலிரவு ஆட்டங்கள் நடைபெற முக்கிய கரணம் கிரிக்கெட் ரசிகர்களிடையே டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வம் குறைந்து வருவதுதான். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மதியம் அல்லது சாயங்காலம் தொடங்கி நடைபெறுவதால், ரசிகர்கள் தங்கள் வேலைகளை முடித்து விட்டு மேட்ச் பார்க்க ஆரம்பிக்கின்றனர். மேலும், மைதானத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வருகின்றனர்.
ஆனால், டெஸ்ட் போட்டி காலை முதல் மாலை அலுவலக நேரத்தில் நடைபெறுவதால் மைதானத்துக்கு அதிக ரசிகர்கள் வருவதில்லை, டிவியிலும் அதிகம் பேர் டெஸ்ட் போட்டிகளை பார்ப்பதில்லை. இதனால், டெஸ்ட் போட்டிகளை மதியம் தொடங்கி, இரவு வரை நடத்த கிரிக்கெட் நிர்வாகங்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றன. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்திற்கு பதிலாக பிங்க் நிறம் கொண்ட பந்துகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…