#Cricket Breaking: 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவு: 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்த இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம்டெஸ்ட் போட்டியில் இரண்டாம் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் அடித்தது.
இன்று தொடங்கிய ஆட்டத்தில் அக்சர் 5 ரன்கள், இஷாந்த் மற்றும் குல்தீப் டக் அவுட், சிராஜ் 4 மட்டுமே எடுத்ததால் இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் மட்டுமே அடித்தது. களத்தில் பண்ட் 58 ரன்களுடன் இருந்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் மொயீன் அலி தலா 4 விக்கெட்டுகளையும், ஸ்டோன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் – டொமினிக் சிப்லி களமிறங்கினார்கள். முதலாம் ஓவரிலே ரோரி பர்ன்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். பின், 16 ரன்களில் டொமினிக் சிப்லி வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட், 6 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர், 9 ரன்களில் லாரன்ஸ் வெளியேற, அதனைதொடர்ந்து 18 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் வெளியேறினார். 23.2 ஆம் ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 52 ரன்கள் மட்டுமே அடித்தது. 22 ரன்கள் எடுத்து ஆலி போப் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி, 6 ரன்களிலும், ஒல்லி ஸ்டோன் 1 ரன் மட்டுமே எடுத்தார்.
இறுதியாக 59.5 ஓவரில் இங்கிலாந்து அணி, தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் அடித்தது. இதனால் இந்திய அணி, 195 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் அஸ்வின் தலா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அவரைதொடர்ந்து அக்ஸர் படேல் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.
இதனைதொடர்ந்து இந்திய அணி, தனது பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். இதில் 11 ரன்கள் எடுத்து கில் வெளியேறினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் 25 ரன்களில் ரோஹித் ஷர்மாவும், புஜாரா 7 ரன்கள் அடித்துள்ளார்.