நடப்பு ஐபிஎல்லில் டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ திடீர் விலகல்..!
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மாலன் இருவரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரைநடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் பஞ்சாப் கிங்ஸின் டேவிட் மாலன் இருவரும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி மாலனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் ஏடன் மார்க்ராமை அணியில் விளையாடுவார் என அறிவித்துள்ளனர். ஜானி பேர்ஸ்டோ பதில் விரைவில் மாற்று வீரர் அறிவிக்கப்படும் என்று அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர், நேற்று 5-வது போட்டி நடைபெற இருந்த நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது இந்திய பிசியோ நிபுணருக்கு கொரோனா உறுதியானது.
???? UPDATE: Dawid Malan will not be travelling to UAE for the remainder of #IPL2021.
He will be taking some time off to be with his family ahead of the #T20WorldCup and Ashes. #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/3ZUEDVZ2Ui
— Punjab Kings (@PunjabKingsIPL) September 11, 2021
இதனால், இந்திய வீரர்கள் விளையாடும் சூழல் இல்லை என பிசிசிஐ -க்கு கடிதம் எழுதினர். பின்னர், 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. 5-வது போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஜானி பேர்ஸ்டோ, சாம் கரண், மொயீன் அலி, டேவிட் மாலன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய மீதம் உள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.