ருத்திரத்தாண்டவம் ஆடிய டேவிட் வார்னர் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையான நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிடையான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெயில்(15) மற்றும் லீவிஸ் (29) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்பு களமிறங்கிய பூரான்(4) மற்றும் ரோஸ்டன் சேஸ்(0) ஏமாற்றத்தை தந்தனர். அந்த அணியின் கேப்டன் பொல்லார்டு அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்தார்.மற்ற வீரர்களான பிராவோ(10),ரசல்(18) மற்றும் ஹோல்டர்(1) ஆகியவர்கள் வரிசை கட்டிக் கொண்டு ஆட்டமிழந்தனர்.20 ஓவர்கள் அணி 7 விக்கெட்களை இழந்து 157 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பின் ஆகியோர் களமிறங்கினர்.ஆரோன் பிஞ்ச் 9 ரன்களுக்கு ஆட்டம் இழக்க டேவிட் வார்னர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை காட்டினார் இறுதி வரைக்கும் ஆட்டமிழக்காமல் 89 ரன்களை குவித்தார்.இதில் 9 நான்கு மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய மிச்செல் ஹார்ஸ் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருக்கும் பொழுது 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.இதனிடையே ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 16.2 ஓவரில் 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025