ஹிட்மேனை பின்னுக்கு தள்ளிய டேவிட் வார்னர்..!!
ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர்.
150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன் மூலம் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் 54 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் சீசன்களில் அதிகம் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடைத்தை பிடித்துள்ளார்.
இதுவரை 144 ஐபிஎல் போட்டிகள் விளையாடி டேவிட் வார்னர் 5311 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் சீசன்களில் அதிகம் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது டேவிட் வார்னர் இடைத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்பாக மூன்றாவது இடத்தில ரோஹித் சர்மா 5292 ரன்களில் இருந்தார். மேலும் விராட் கோலி 5944 ரன்களுடன் முதலிடத்திலும், சுரேஷ் ரெய்னா 5422 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ஷிகர் தவான் 5282 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.