ஓய்வு பெறவில்லை இனிமே தான் ஆட்டமே இருக்கு! மௌனம் களைத்த டேவிட் மில்லர்!
உலகக்கோப்பை 2024 டி20 : இறுதிப்போட்டியில் இந்திய அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதியநிலையில் , இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள்.
அந்த வகையில், இதயத்தை உடைக்கும் தோல்விக்குப் பிறகு, டேவிட் மில்லர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. டேவிட் மில்லருக்கு வயது 35 பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடி கொண்டு இருக்கிறார் எனவே, அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்த தகவல் உண்மை என பலரும் நினைத்தார்கள்.
இந்த நிலையில், ஓய்வு பெறவில்லை என டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் இது பற்றி கூறியதாவது ” நான் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெறுவதாக அறிக்கைகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், நான் ஓய்வு அறிவிக்கவில்லை. இன்னும் தொடர்ந்து எங்களுடைய தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடுவேன். என்கிட்ட இருந்து இனிமேல் தான் சிறந்த ஆட்டம் வரப்போகிறது” எனவும் கூறியுள்ளார்.
ஓய்வு பெறவில்லை என மில்லர் விளக்கம் கொடுத்த நிலையில், ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுங்கள் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், டேவிட் மில்லர் இதுவரை 125 டி20 போட்டிகளில் விளையாடி 2,439 ரன்கள் எடுத்துள்ளார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 106 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
David Miller has not been retired.
The best is yet to come????
That’s a big player statement.#DavidMilller #SouthAfrica. pic.twitter.com/en4Wm3cMYx— Iqra (@Iqra87685226) July 3, 2024