ஜெர்சியை மாற்றிக்கொண்ட டேவிட் பெக்காம், ரோஹித் சர்மா.. வைரலாகும் புகைப்படம்..!

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில்  முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 47, ஷுப்மான் கில் 80 ,விராட் கோலி  117, ஷ்ரேயாஸ் ஐயர் 105, கே.எல் ராகுல் 39 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 3 விக்கெட்டை வீழ்த்தினார். 398 ரன்களை இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி  ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் டேரில் மிட்செல் 134 ரன்களும் , கேப்டன் கேன் வில்லியம்சன் 69  ரன்கள் எடுக்க இறுதியாக நியூசிலாந்து  48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்தது.

இந்திய அணியில் ஷமி 7 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் , ஜஸ்பிரித் பும்ரா , முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை சந்தித்தார். இதன் போது இரு ஜாம்பவான்களும் ஜெர்சியை மாற்றிக்கொண்டனர். இந்திய கேப்டன்  ரோஹித் சர்மா ரியல் மாட்ரிட்டின் ஜெர்சியிலும், டேவிட் பெக்காம் இந்திய அணியின் ஜெர்சியில் காணப்பட்டனர். இருப்பினும், ரோஹித் சர்மா மற்றும் டேவிட் பெக்காமின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படம்:

இந்திய கேப்டன் ரோஹித்திற்கு டேவிட் பெக்காம் பரிசாக அளித்துள்ள ஜெர்சியில் டேவிட் பெக்காமின் பெயர் மற்றும் ஜெர்சி எண் 23 என எழுதப்பட்டுள்ளது. டேவிட் பெக்காம் ரியல் மாட்ரிட் அணிக்காக ஜெர்சி எண் 23 அணிந்து விளையாடி வந்தார்.  அதே சமயம் டேவிட் பெக்காமுக்கு ரோஹித் சர்மா பரிசாக அளித்துள்ள ஜெர்சியில் ரோஹித் சர்மாவின் பெயர் மற்றும் ஜெர்சி எண்-45 என எழுதப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை டேவிட் பெக்காம் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதில்  ரோஹித் சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியை டேக் செய்து, கேப்டனை சந்தித்ததில் மகிழ்ச்சி இறுதிப்போட்டிக்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்