டி-20 உலகக்கோப்பைக்கான தேதிகள் வெளியானது… ஐபிஎல் தொடரும் இதனால் மாறுமா.?

iCC t20WC US

2024 ஆம் ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் டி-20 உலகக்கோப்பை தொடருக்கான நடத்தும் உரிமை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு நாடுகளும் ஏற்றுள்ள நிலையில் ஐசிசியும் அதற்கான அனுமதியை மீண்டும் வழங்கிய நிலையில், தொடரை அக்டோபர் மாதத்திலிருந்து ஜூன் மாதம் நடத்த அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 2024 ஆம் ஆண்டிற்கான பதிப்பு, ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறுவதாக கிரிக்கெட் வர்ணனையாளரான ஆகாஷ் சோப்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கான புளோரிடா, மோரிஸ்வில், டல்லாஸ் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்கள் ஐசிசி தரப்பில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரும், ஐசிசி டி-20 உலகக்கோப்பையால் முன்கூட்டியே நடத்தி முடிக்க வாய்ப்பிருக்கிறது எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்பது குறித்தும் ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்