காயம் காரணமாக விலகிய தசுன் சனகா.! இலங்கை அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு.! 

Srilankan Cricketer Dasun Shanaka

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ஆரம்பித்து ஒவ்வொரு அணியும் குறைந்தது 2 போட்டிகள் வீதம் என்ற அளவிலேயே விளையாடி உள்ளன. இதில் இலங்கை அணி தசுன் சனகா தலைமையில் 2 போட்டிகளில் விளையாடி இருந்தது.

2 போட்டிகள் மட்டுமே விளையாடிய நிலையில், இலங்கை கேப்டன் தசுன் சனகாவிற்கு  தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு, உலக கோப்பை தொடரில் இருந்தே விலகும் சூழ்நிலை உண்டாகியுள்ளது.

ENGvAFG : டாஸ் வென்ற இங்கிலாந்து.! பேட்டிங்கிற்கு தயாரான ஆப்கானிஸ்தான்.!

தற்போது இலங்கை அணியின் கேப்டனும் ஆல் ரவுண்டருமான தசுன் சனகாவிற்கு பதிலாக, சமிகா கருணரத்னே அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும் இனி வரும் போட்டிகளில் இலங்கை அணி கேப்டனாக நட்சத்திர பேட்ஸ்மேன் குசல் மெண்டிஸ்  செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும், அக்டோபர் 10ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியும் கண்டுள்ளது இலங்கை அணி. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இலங்கை அணிக்கு கேப்டன் தசுன் சனகாவின் காயம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation