உலககோப்பை தொடரில் இருந்து டேல் ஸ்டெயின் காயம் காரணமாக விலகினார்
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது. இதற்கு முன் மோதிய 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டியில் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணிக்கு இந்த உலக கோப்பையில் முதல் முறையாக முதல் போட்டியை சந்திக்க உள்ளது.இந்நிலையில் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இவரின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இதற்கு முன் விளையாட 2 போட்டிகளிலும் இவர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் டேல் ஸ்டெயினுக்கு மாற்று வீரராக தென்னாபிரிக்க அணியின் பியூரான் ஹெண்ட்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இவர் விலகியது தென்னாபிரிக்க அணிக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.