“நான் இதை எதிர்பார்க்கவில்லை”- சிவம் மாவியின் அந்த ஒரு வார்த்தையால் கண்ணீர் விட்ட ஸ்டெய்ன்!

Published by
Surya

“எனது தெய்வசிலை எப்போதுமே டேல் ஸ்டெய்ன் தான்” என்று கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் சிவம் மாவி பேசியதற்கு தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்ணீர் விட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ESPN ஊடகத்தில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியில் சிவம் மாவி கலந்துகொண்டார். அப்பொழுது பேசிய அவர், “நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியபோதே டேல் ஸ்டெய்னை மிகவும் நெருக்கமாக பின்தொடர்ந்தேன். அவரைப்பார்த்து தான் நான் அவுட்விங்கர்களை வீச பழகினேன்”

மேலும் பேசிய அவர், “பந்து வீசுவது எப்படி என்பதை அறிய முயற்சிக்கும் போது நான் டேல் ஸ்டெய்ன் வீசும் ஸ்டைலை பின்தொடர்ந்தேன். பும்ரா, புவனேஷ்வர் போன்ற வேறு சில பந்து வீச்சாளர்களின் ஸ்டைல்களையும் நான் பின்பற்றினேன். ஆனால் எனது தெய்வசிலை, எனது ரோல் மாடல் எப்போதுமே டேல் ஸ்டெய்ன் தான்” என்று சிவம் மாவி கூறினார். அவரின் பேச்சை கெட்ட டேல் ஸ்டெய்னின் கண்கள் கலங்கியது.

அதன்பின் பேசிய ஸ்டெய்ன், “உண்மையாக, அவரது வார்த்தைகள் என் கண்களில் கண்ணீரை கொண்டு வந்தது. எனக்கு கிரிக்கெட் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். அதனால்தான் நான் இப்பவரை விளையாடுகிறேன். சிவம் மாவி சிறப்பாக விளையாடுகிறார். அவர் இப்படியே விளையாடினால், விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்றும் அவரது கனவுகளை நினைவாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago
வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago
தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago
ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago
போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago