ஃபைனலில் ஆட்டநாயகன் பட்டத்தை தட்டிச் சென்ற பென் ஸ்டோக்ஸ்..!
2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசீலாந்து அணி பேட்டிஙை தேர்வு செய்நனர். 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் குவித்திருந்தனர். இதில் ஹென்றி நிக்கோலஸ் குவித்த 55 ரன்களே அணியின் அதிதபட்ச ரன்னாக இருக்கிறது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சிறப்பாக விளையாடினர். 50 ஓவர்கள் முடிவில் அனைதீது விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் குவித்து போட்டியை சமம் செய்தனர். இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 84 மற்றும் பட்லர் 59 ரன்கள் குவித்துள்ளனர்.
இதன் பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் குவித்தது. நியூசீலாந்து அணியும் 15 ரன்கள் குவித்து மீண்டும் சமம் செய்தனர். இதனால் அதிக பவுண்டரிகள் அடித்து அணியான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாத அறிவித்தனர்.
இந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற மிக்கிய காரணமாக இருப்பது பென் ஸ்டோக்ஸ். இவர் 84 ரன்கள் குவித்து அணியை மோசமான நிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்தார். இதன் பிறகு சூப்பர் ஓவரிலும் சிறப்பாக விளையாடினார். இதனால் இந்த போட்டியின் ஆட்டநாயகன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.