மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதலில் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இதற்குஇடையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்தது. இதன் பின் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பால் ஐபிஎல் போட்டிகள் மே 3ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மே 3 ஆம் தேதிக்கு பின் தொடரை நடத்தலாமா என பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…