2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? அசுர பலத்துடன் காத்திருக்கும் ஆஸ்திரேலியா!

2011 உலகக்கோப்பை காலிறுதியை அடுத்து இந்திய அணி ஐசிசி நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் 2 முறை தோல்வி கண்டுள்ளது. இன்றைய நாள் ஆட்டத்தில் வெற்றி பெரும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

INDvAUS - CT 2025 Semi final

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் அரையிறுதியில் குரூப் ஏ-வில் முதலிடம் பிடித்த இந்தியா மற்றும் குரூப்-பியில் 2ஆம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் மோத உள்ளன. வழக்கம் போல இந்த போட்டியும் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இரு அணிகளுக்கும் ஐஐசி கோப்பை போட்டிகளில் நாக் அவுட் வெற்றி  -தோல்வி கணக்கீடு என பார்த்தல் மொத்தம் 7 போட்டிகளில் இந்தியா 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் வென்றுள்ளது. ஆனால், அந்த 4 போட்டிகளும் 1998, 2000, 2007, 2011 ஆகும். 2011 காலிறுதி போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 2015 உலகக்கோப்பை அரை இறுதி மற்றும் 2023 உலகக்கோப்பை இறுதி போட்டிகளில் தோல்வியையே தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுவும், உலகக்கோப்பை தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் இந்தியா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த தோல்விகளை மனதில் வைத்து இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இந்தியா அணி பழிதீர்க்கும் முனைப்பில் விளையாடும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை பேட் கம்மின்ஸ்,  மிட்சல் ஸ்டார்க், மிட்சல் மார்ஷ், ஹேசில்வுட் ஆகியோர் இல்லாதது பந்துவீச்சில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால், சமீபத்திய போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் எதிரணி ரன் குவிப்பைதை தடுக்க முடியவில்லை. ஆனாலும், மிரட்டலான பேட்டிங் லைன் அப் கொண்டு இமாலய இலக்குகளை கூட அசால்டாக சேஸ் செய்து வெற்றிவாகை சூடிவிடுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் துபாய் மைதானத்தில் இந்திய அணிக்கு நன்றாக கைகொடுக்கிறது. குறிப்பாக கடந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு மிக அபாரமாக இருந்தது. மேலும், பேட்டிங்கிலும் தொடக்கத்தில் சுப்மன் கில், ரோஹித் சர்மா ஆகியோரில் ஒருவர் நன்றாக ஆடிவிடுகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய கோலி மீண்டும் நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷ்ரேயஸ் ஐயர் இந்த சீசனில் தனது பலத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். ஆல்ரவுண்டர் அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா போன்றோரும் மிடில் ஆர்டரில் தங்கள் பங்கை திறம்பட செய்வதால் இந்திய அணியில் இருந்து அபாரமான ஆட்டம், மிக பெரிய வெற்றி என்றில்லாமல் அனைவரும் நன்றாக விளையாடி இதுவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளனர்.

இப்படி இருக்கும் சூழலில் இன்றைய ஆட்டத்தை கணிக்க முடியாத சூழலே உருவாகி உள்ளது . இதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்