CSKvsRR: கடைசி நேரத்தில் சொதப்பிய சென்னை! தோல்விக்கான முக்கிய காரணங்கள்?

சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்த நிலையில், ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

CSKvsRR

குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் முதல் போட்டியில் மும்பை அணியுடன் வெற்றிபெற்றாலும் கூட 155 ரன்கள் அடிக்கவே திணறி விளையாடி கடைசி நேரத்தில் தான் வெற்றிபெற்றது. அதன்பிறகு பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 196 ரன்களை சேஸிங் செய்து கொண்டிருந்தபோது தடுமாறி மொத்தமாகவே 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

அந்த தோல்வியை தொடர்ந்து வெற்றிபெறவேண்டும் என்ற நோக்குடன் நேற்று ராஜஸ்தான் அணியுடன் குவஹாத்தி பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி  முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். 183 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கிய நிலையில் வெற்றிபெறும் வகையில் போட்டியை கொண்டு சென்று தோல்வி அடைந்தது என்று தான் சொல்லவேண்டும்.

இறுதியாக சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணி  6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்விக்கான காரணங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

சேஸிங்கில் தடுமாற்றம்: சென்னை அணி சமீப காலமாக ரன்களை துரத்துவதில் (chasing) சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட 175 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து சென்னை வெற்றி பெறவில்லை. அந்த மோசமான பார்ம் இப்போதும் தொடர்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் நிர்ணயித்த 183 ரன்கள் இலக்கை எட்டுவதற்கு சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடக்கத்தில் விக்கெட் இழப்பு: சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா டக் அவுட் ஆனது அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் சரியான தொடக்கத்தை கொடுத்துவிட்டு ஆட்டமிழந்திருந்தால் நிச்சயமாக அணிக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்கும். அவர் விக்கெட் விட்டதால் அடுத்ததாக வந்தவர்களும் விக்கெட் இழக்க தொடக்கத்தில் ரன்களை குவிக்க சென்னை தவறியது தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

நடு ஓவர்களில் மந்தமான ஆட்டம்: கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 63 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடினாலும், நடு ஓவர்களில் ரன் வேகத்தை அதிகரிக்க முடியவில்லை. இதன் காரணமாக கடைசி நேரத்தில் அழுத்தம் ஏற்பட்டது.

ராஜஸ்தானின் சிறப்பான பந்துவீச்சு: ராஜஸ்தான் அணியின் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னையின் முக்கிய ஆட்டக்காரர்களை வெளியேற்றினார். ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மாவும் தலா ஒரு விக்கெட்டை எடுத்து அழுத்தம் கொடுத்தனர்.

திடீர் திருப்பம் : கடைசி நேரத்தில் அனைவருடைய நம்பிக்கையாக இருந்த தோனி (16 ரன்கள்) மற்றும் ஜடேஜா (32* ரன்கள்) முயற்சி செய்த போதிலும், கடைசி ஓவர்களில் தேவையான பெரிய ஷாட்களை ஆட முடியவில்லை. குறிப்பாக, தோனி சந்தீப் சர்மாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது திருப்புமுனையாக அமைந்தது. தோனி ஆட்டமிழந்ததும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்