CSKvSRH: தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? ஐதராபாத்துக்கு 155 ரன்கள் இலக்கு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 160 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடரின் 17-ஆவது லீக் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் மீண்டு ஏமாற்றை தந்தனர். இருவரும் தொடக்கத்தில் சற்று நன்றாக விளையாடி வந்த நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன்பின் அம்பதி ராயுடு வெளியேற, மொயின் அலி 35 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதனைத்தொடர்ந்து வந்த தோனி விக்கெட்டை இழக்க, கேப்டன் ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து சற்று அதிரடியாக விளையாடிய நிலையில், இறுதி ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த நிலையில், 155 ரன்கள் அடித்தால் ஐதராபாத் அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும். இரண்டு அணிகளும் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், இன்று எந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.