CSKvRCB : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளனர். இந்த ஆட்டம் இன்று இரவு எட்டு மணி அளவில் தொடங்க உள்ளது. முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் இந்த போட்டியில் மிகவும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
கடந்த முறை நடப்புச் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் ஆட்டத்தை துவங்கும் முனைப்புடனும், இந்த முறையெனும் கண்டிப்பாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடனும் இரு அணிகளும் மோத உள்ளன.
இந்த இரு அணிகளிலும் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு எதிரணி வந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றனர். அவர்களின் ஒரு சிலரை மட்டும் தற்போது இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
சர்வதேச பந்துவீச்சார்களையே அடித்து துவம்சம் செய்து விடும் கிங் கோலி ஒரு சில பவுலர்களிடம் தடுமாறுவார். அந்த ஒரு சில பவுலர்களில் சென்னை அணி பந்துவீச்சாளர் தீபக் சாகரும் ஒருவர். தீபக் சாகர் பந்துவீச்சில் இதுவரை பெரிய அளவில் விராட் கோலி விளையாடியது இல்லை என்பது அவரது ஆட்டத்தை பார்த்தாலே தெரியும்.
சர்வதேச கிரிக்கெட் அணிகளையே டி 20 கிரிக்கெட்டில் மிரள வைத்தவர் மேக்ஸ்வல். இவர் எப்படி ஆடுவார் இவருக்கு எப்படி பந்து போட வேண்டும் என தெரிவதற்குள்ளே எனது அதிரடி ஆட்டத்தால் எதிரணியை கலங்கடித்து விடுவார். இருந்தும், இவர் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜே பந்து வீச்சில் இதுவரை ஏழு முறை ஆட்டம் இழந்துள்ளார். ஜடேஜாவின் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் தடுமாறியதே அதிகமாக உள்ளது.
முதன்முறையாக சென்னை எனும் மிகப்பெரிய அணியை வழிநடத்தி செல்ல இருக்கும் கேப்டன் ருதுராஜ், மிகப்பெரிய பொறுப்புகளுடன் இன்று ஆட்டத்தில் களமிறங்க உள்ளார். நிதானமான தொடக்கத்தை அளித்து பின்னர் அதிரடி காட்டும் ரருதுராஜ், பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பந்துவீச்சில் சற்று தடுமாறி இருக்கிறார். அதனால் இன்றைய விளையாட்டில் சற்று நிதானமாக சிராஜ் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…