ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 விக்கெட்களில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாம் வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – உத்தப்பா களமிறங்கினார்கள்.
ருதுராஜ் டக் அவுட் ஆக, பின்னர் களமிறங்கிய சான்ட்னர் 11 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அம்பதி ராயுடு களமிறக்க, சிறப்பாக ஆடிவந்த உத்தப்பா 30 ரன்களில் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 13 ரன்களிலும், ஜடேஜா 3 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் தோனி களமிறங்கினர்.
கடைசி 4 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாம் வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமின்றி மும்பை அணி, தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…