ஐபிஎல் 2020-ல் சென்னை அணி இறுதி போட்டியில் வெற்றிபெற்று, கோப்பையை கைப்பற்றியதாக நெட்டிசன்கள் உருவாக்கிய புள்ளிப் பட்டியல், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான விளங்குவது, சீனியர் வீரர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை அணி துபாய்க்கு வந்த நிலையில், ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தொடரில் இருந்து விலகி, இந்தியா திரும்பினார்கள்.
ரெய்னா விலகியது, சென்னை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், தொடர் தோல்வியால் சென்னை அணி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அடுத்த விழாவும் இணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெரும்.
இந்தநிலையில், அடுத்தடுத்து நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்து, பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதாக புள்ளிப் பட்டியலை உருவாக்கி, அந்தப் புள்ளிபட்டியலில் சென்னை அணி, 2020 ஆம் ஐபிஎல் தொடரில் வெற்றிபெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த புள்ளிப் பட்டியல் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பரவிவருகிறது. அதுமட்டுமின்றி, பலரும் இந்த சம்பவம் நடந்தால் மகிழ்ச்சி எனும், நடக்க வாய்ப்புக்கள் கம்மி எனவும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே ரசிகர்களின் இந்த ஆசை நிறைவேறுமா??? பொறுத்திருந்து பாப்போம்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…