CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இரு அணிகளுமே 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று அதள பாதாளத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 9வது இடத்திலும், சென்னை 10வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளுக்கும் இந்த சீசனில் பிளே ஆப் என்பது வெகு தொலைவில் இருக்கிறது. அதனை எட்டி பிடிக்க இனி வரும் போட்டிகளில் இரு அணிகளுமே ஆக்ரோஷத்துடன் விளையாட வேண்டிய சூழலில் நிலைமை உள்ளது.
Do or Die எனக் கூறப்படும் இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு பிளே ஆப்-ஐ எட்டி பார்க்கும் வாய்ப்பு உள்ளதால் இன்றைய போட்டியும் பரபரப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பேட்டிங் களமிறங்க உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
எம்.தோனி தலைமையிலான அணியில் ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, தீபக் ஹூடா, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனட்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.