ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 17-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. புனேவில் உள்ள DY படில் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த கேன் வில்லியம்சன் 40 பந்துகளுக்கு 32 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். அவர் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து அதிரடியாக அடிவர, 50 பந்துகளில் 75 ரன்கள் அடித்து மிரட்டினார், அபிஷேக் ஷர்மா.
இறுதியாக ஹைதராபாத் அணி, 17.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 155 ரன்கள் எடுத்து, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் 9-ம் இடத்தை பெற்றுள்ளது. மேலும், அடுத்த நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே-ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…