#CSKvSRH: மொயீன் அலி, ராயுடுக்கு காயம்.. உத்தப்பா களமிறங்க வாய்ப்பு? எதிர்பார்க்கப்படும் XI!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள சென்னை – ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மொயீன் அலி, அம்பதி ராயுடுக்கு பதில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு பதில் ராபின் உத்தப்பா களமிறங்க வாய்ப்புள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 23-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது. அதில் 10 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 4 முறை ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 5 போட்டிகள் விளையாடி 4 போட்டியில் வெற்றி பெற்று, புள்ளிபட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது அதேபோல ஹைதராபாத் அணி, 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சென்னை அணியின் பேட்டிங்கை பொறுத்தளவில், தொடக்க ஆட்டக்காரர்கள், ஆல்-ரவுண்டர்கள் என அனைவரும் அதிரடியாக உள்ளனர். முன்பைவிட தொடக்க ஆட்டக்காரர்கள் தற்பொழுது சிறப்பாக ஆடத்தொடங்கியது, சென்னை அணிக்கு கூடுதல் பலம். சென்னை அணியின் அதிரடி வீரர் மொயின் அலிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கவில்லை. அவர் காயத்தில் இருந்து மீண்டாலும், இன்றைய போட்டியில் அவர் ஆடுவது சந்தேகமே என்று கூறப்படுகிறது. பிராவோ, டு பிளசிஸ், சாம் கரண், இம்ரான் தாஹிர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் அணியில் இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமே. அம்பதி ராயுடுக்கும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய போட்டியில் அவருக்கு பதில் ராபின் ஊத்தப்பா அல்லது கிருஷ்ணப்ப கவுதமுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர் குமாருக்கு காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடவில்லை. தற்பொழுது அவர் காயத்தில் இருந்து குணமடைந்த நிலையில், கலீல் அஹமத்துக்கு அல்லது சித்தார்த் கவுலுக்கு பதில் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கேட்டார் ஜாதவுக்கு பதிலாக அப்துல் சமத் களமிறங்க வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கப்படும் XI:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபஃப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா (அல்லது) அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, சாம் கரண், தீபக் சாஹர், ஷார்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், விராட் சிங் / மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, கேதார் ஜாதவ் / அப்துல் சமத், ரஷீத் கான், ஜகதீஷா சுசித், கலீல் அகமது / புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல்.

Published by
Surya

Recent Posts

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…

12 minutes ago

NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…

39 minutes ago

2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!

ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…

1 hour ago

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…

2 hours ago

முதல்ல ஏ.ஆர்.ரஹ்மான்..இப்போ அனிருத்…தொடர்ந்து பெரிய படங்கள் வாய்ப்பை தூக்கிய சாய் அபியங்கர்!

சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…

2 hours ago

முன்னாள் வீரரின் மிரட்டல் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க இளம் வீரர்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி…

3 hours ago