CSK vs RCB : ஆர்சிபி-ஐ பழிதீர்க்குமா சென்னை.? டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச தேர்வு.!
சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களுரூ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர். இவ்விரு அணிகளுக்கு இடையேயான 8வது போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய போகிறது.
கடந்த ஆண்டு Playoff வாய்ப்பைக் கெடுத்த ஆர்சிபி-யை பழிதீர்க்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் போட்டியில் இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதால், இந்த போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.
இதுவரை, சேப்பாக்கத்தில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆர்சிபி ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆர்சிபி தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. 17 ஆண்டுகளாக தொடரும் சோகத்துக்கு இன்றைய போட்டியில் விடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஆர்சிபி ரசிகர்களிடையே உள்ளது. என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
அணியில் மாற்றம்
இரு அணிகளிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியில் காயத்தில் இருந்து மீண்ட பதிரானா, நாதன் எல்லிஸுக்குப் பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆர்சிபி அணியில் ராசிக் சலாம் பதிலாக புவனேசுவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
வீரர்கள்
சென்னை அணி :
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணியில், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூர் அணி :
கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான அணியில், விராட் கோலி, பிலிப் சால்ட், தேவ்தத் படிக்கல், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(வ), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025