CSK vs PBKS:ஐபிஎல்லின் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே vs பிபிகேஎஸ் போட்டியானது இன்று மாலை 3.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 2 வது இடத்தை பிடித்துள்ளது.மேலும்,சென்னை அணி ஏற்கனவே பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றுள்ளது மற்றும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்த முதல் அணி இதுவாகும். ஐபிஎல் 2021 இல் சிஎஸ்கே இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளது,அதில் 9 வெற்றி மற்றும் 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
மறுபுறம்,பஞ்சாப் அணி ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் 6 வது இடத்தை பிடித்துள்ளது. கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ளது.அதில் 5 ஆட்டங்களில் மட்டுமே வென்று 8 ல் தோல்வியடைந்து 10 புள்ளிகள் பெற்றுள்ளன.இதனால்,பஞ்சாப் அணி பிளேஆஃப்களில் நுழைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன, இதில் சிஎஸ்கே 16 ஆட்டங்களில் வென்றது, பிபிகேஎஸ் 9 வெற்றிகளை மட்டுமே பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் 2019 முதல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக எந்த தோல்வியையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாத்தியமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெஸிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, எம்எஸ் தோனி w (wk), டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட்
பெஞ்ச்: இம்ரான் தாஹிர், சாம் கர்ரன், சுரேஷ் ரெய்னா.
சாத்தியமான பஞ்சாப் கிங்ஸ் அணி: KL ராகுல் © (wk), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், சர்பராஸ் கான், மொயிஸ் ஹென்றிக்ஸ், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய்
பெஞ்ச்: மன்தீப் சிங், தீபக் ஹூடா, நாதன் எல்லிஸ்.
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…