CSK vs PBKS:இன்று சென்னையுடன் மோதும் பஞ்சாப்…வெற்றி பெறுமா?…!

Default Image

CSK vs PBKS:ஐபிஎல்லின் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே vs பிபிகேஎஸ் போட்டியானது இன்று மாலை 3.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 2 வது இடத்தை பிடித்துள்ளது.மேலும்,சென்னை அணி ஏற்கனவே பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றுள்ளது மற்றும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்த முதல் அணி இதுவாகும். ஐபிஎல் 2021 இல் சிஎஸ்கே இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளது,அதில் 9 வெற்றி மற்றும் 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

மறுபுறம்,பஞ்சாப் அணி ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் 6 வது இடத்தை பிடித்துள்ளது. கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ளது.அதில் 5 ஆட்டங்களில் மட்டுமே வென்று 8 ல் தோல்வியடைந்து 10 புள்ளிகள் பெற்றுள்ளன.இதனால்,பஞ்சாப் அணி  பிளேஆஃப்களில் நுழைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன, இதில் சிஎஸ்கே 16 ஆட்டங்களில் வென்றது, பிபிகேஎஸ் 9 வெற்றிகளை மட்டுமே பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் 2019 முதல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக எந்த தோல்வியையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாத்தியமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெஸிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, எம்எஸ் தோனி w (wk), டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட்

பெஞ்ச்: இம்ரான் தாஹிர், சாம் கர்ரன், சுரேஷ் ரெய்னா.

சாத்தியமான பஞ்சாப் கிங்ஸ் அணி: KL ராகுல் © (wk), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், சர்பராஸ் கான், மொயிஸ் ஹென்றிக்ஸ், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய்

பெஞ்ச்: மன்தீப் சிங், தீபக் ஹூடா, நாதன் எல்லிஸ்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்