இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 23 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் 14 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 8 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சென்னை அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது, அடுத்ததாக நடந்த இரண்டு போட்டிகளும் வெற்றி பெற்று புள்ளி விவரப்பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் இந்த போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதைபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 3 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, டு பிளசிஸ், மொயின் அலி, தோனி, அம்பதி ராயுடு, சாம் கரன், பிராவோ, ஜடேஜா, ஷரத்துல் தாக்கூர், தீபக் சாகர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுப்மான் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, எயோன் மோர்கன், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, ஹர்பஜன் சிங், ஷிவம் மாவி
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…