CSK vs KKR கண் இமைக்கும் நேரத்தில் டிக்கெட்டுகள் காலி…சென்னை ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்.!!
CSK vs KKR அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் முடிவு.
16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விருவிருப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை 14-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்துகின்றனர்.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைனில் தொடங்கப்பட்ட நிலையில், விறுவிறுவன சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டும் புக் ஆகிவிட்டது. இதன் மூலமே சென்னை அணி ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் 12 போட்டிகள் விளையாடி 7 போட்டியில் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் புள்ளிவிவர பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.