CSK vs DC : விசில் போடு மச்சி.., சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த 2 முக்கிய அப்டேட் இதோ…
டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் CSK அணியில் கான்வே மற்றும் முகேஷ் சவுத்ரி சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் ராகுல் திரிபாதி இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்றும் கேப்டன் ருதுராஜ் அறிவித்துள்ளார்.

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார். டாஸ் வென்ற பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கிய 2 அப்டேட்களை தெரிவித்தார். ஒன்று கடந்த 3 போட்டிகளில் களமிறங்காத டெவோன் காaன்வே இந்த போட்டியில் ஓவர்டனுக்கு பதிலாக களமிறங்க உள்ளார் என அறிவித்தார்.
மேலும், ராகுல் திரிபாதிக்கு பதிலாக முகேஷ் சவுத்ரி களமிறங்க உள்ளார் எனவும் தெரிவித்தார். மேலும் தனது முழங்கை காயம் தற்போது சரியாகிவிட்டது என தெரிவித்தார். ராகுல் திரிபாதி சரியாக விளையாடாததால் அவரை பிளேயிங் 11-ல் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் எனவும், கான்வேவை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலரும் CSK- வின் தொடர் தோல்விக்கு பிறகு கருத்து தெரிவித்து வந்தனர். அதனை அப்படியே கேப்டன் ருதுராஜ் அறிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, தோனி(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பத்திரனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிவம் துபே, ஜேமி ஓவர்டன் ஆகியோர் இம்பேக்ட் பிளேயராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி கேபிட்டல்ஸ் :
அக்சர் படேல் தலைமையில், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சிறிய ஏமாற்றம் :
நேற்று CSK அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறுகையில், இன்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முழங்கை காயம் சரியாகவில்லை என்றால் கேப்டனாக தோனி இன்றைய போட்டியை வழிநடத்துவார் எனக் தோனி பெயரை குறிப்பிடாமல் பேட்டியளித்தார். ஆனால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் களத்திற்கு வந்துள்ளதால் மீண்டும் CSK கேப்டன் தோனியை காணமுடியாமல் ரசிகர்கள் சிறிய ஏமாற்றம் அடைந்தனர்.