CSK V MI: நேருக்கு நேரில் அதிக வெற்றிகள் யார்? புள்ளிவிவரம் உள்ளே!

Default Image
  • இரு சமபலம் கொண்ட  அணிகள் மோதும்போது தீப்பொறி பறப்பது வழக்கம். ஆனால் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் போது தீப்பிழம்புகளை கொட்டும் அளவிற்கு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள்.

மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று மாலை 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. சென்னை அணி இதுவரை பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அசராத சிங்கமாக பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் மும்பை அணி பரிதாபமாக முதல் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று சோகத்தில் தன் ரசிகர்களை ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி இன்று மாலை 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

இதுவரை இரு அணிகளுக்கிடையே நேருக்கு நேர்…

  • மோதியது 24 முறை
  • மும்பை வெற்றி 13 முறை
  • சென்னை வெற்றி 11 முறை

வான்கடேயில்…

  • நடைபெற்றது 11 போட்டி
  • மும்பை வெற்றி 6
  • சென்னை வெற்றி 5

கிட்டத்தட்ட இரு அணிகளுமே சமபலத்தில் இன்று மோத உள்ளது இதனால் போட்டியில் தீப்பொறி பறக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்