ஐபிஎல் 2024: அடித்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி! CSK-வுக்கு 192 ரன்கள் இலக்கு

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 192 ரன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
விசாகப்பட்டினம் டாக்டர் வை எஸ் ராஜசேகர் ரெட்டி எஸ்சிஏ-வீடிசி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 13வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் விளையாடியது.
தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பிரித்வி ஷா 43 ரன்களும், டேவிட் வார்னர் 52 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் அக்சர் படேல் 7 ரன்னுடனும், அபிஷேக் பொரேல் 9 ரன்னுடனும் இருந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் மதீஷா பதிரனா 3 விக்கெட்களையும் ரவீந்திர ஜடேஜா மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025